< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"நல்ல நண்பரை இழந்துவிட்டேன்..." சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் ரஜினிகாந்த் உருக்கம்
|6 Jan 2023 1:56 PM IST
ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறும்போது,
சுதாகர் எனது நீண்டகால நண்பர். என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. அவருக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்து வந்தோம்.
ஆனால், அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் பேசினார்.