< Back
மாநில செய்திகள்
கூட்டணி குறித்த அமித்ஷா பேட்டியை நான் பார்க்கவில்லை - எடப்பாடி பழனிசாமி அதிரடி
மாநில செய்திகள்

கூட்டணி குறித்த அமித்ஷா பேட்டியை நான் பார்க்கவில்லை - எடப்பாடி பழனிசாமி அதிரடி

தினத்தந்தி
|
7 Feb 2024 3:21 PM IST

அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜனதா கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியின்போது அமித்ஷாவிடம், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றாகி விட்டது. 3-வது அணி அமைக்க திட்டமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமித்ஷா 'கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சேலத்தில் இன்று ஒரு விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி நான் இன்னும் அதை பார்க்கவில்லை, பார்த்ததும் சொல்கிறேன் என்று அதிரடியாக கூறினார்.

மேலும் செய்திகள்