எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திலிங்கம் விளக்கம்
|தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதயனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சந்திக்காமல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்று ஏற்பட்டதை அடுத்து வைத்திலிங்கம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.
தொற்று உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.