< Back
மாநில செய்திகள்
எது சனாதன தர்மம்? மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம்  - குஷ்பு டுவீட்
மாநில செய்திகள்

எது சனாதன தர்மம்? மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் - குஷ்பு டுவீட்

தினத்தந்தி
|
4 Sept 2023 8:48 PM IST

முஸ்லீம் பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு, மக்கள் கோவில் கட்டினார்கள். அது தான் சனாதன தர்மம் என பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.

சென்னை,

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு நாடு முழுக்க கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில்,

"நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்