< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கணேசமூர்த்தி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை: வைகோ இரங்கல்
|28 March 2024 10:42 AM IST
எம்.பி. சீட் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி துளியளவு கூட உண்மையில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கோவை,
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கணேச மூர்த்தியின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. கணேச மூர்த்தி துணிச்சலானவர், மன உறுதி கொண்டவர். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை.
எம்.பி. சீட் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி துளியளவு கூட உண்மையில்லை. கணேச மூர்த்தி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம்" என்றார்.