< Back
மாநில செய்திகள்
அவதூறாக திட்டியதால் அக்காளை மண்ெவட்டியால் அடித்து கொன்றேன்-போலீசில் சரண் அடைந்த விவசாயி வாக்குமூலம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'அவதூறாக திட்டியதால் அக்காளை மண்ெவட்டியால் அடித்து கொன்றேன்'-போலீசில் சரண் அடைந்த விவசாயி வாக்குமூலம்

தினத்தந்தி
|
26 Jan 2023 6:40 PM GMT

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அவதூறாக திட்டியதால் ஆத்திரத்தில் அக்காளை மண்வெட்டியால் அடித்து கொன்றேன் என்று போலீசில் சரண் அடைந்த விவசாயி வாக்குமூலம் அளித்தார்.

தொண்டி,

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அவதூறாக திட்டியதால் ஆத்திரத்தில் அக்காளை மண்வெட்டியால் அடித்து கொன்றேன் என்று போலீசில் சரண் அடைந்த விவசாயி வாக்குமூலம் அளித்தார்.

மூதாட்டி கொலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் மேல குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 65). இவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டு வயலில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்தார்தனிப் படை போலீசார் விசாரித்து வந்தனர்.

போலீசில் சரண்

இந்தநிலையில் கோவிந்தம்மாளின் தம்பி மகாலிங்கம் என்பவர் நேற்று காலை எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கும், அக்காள் கோவிந்தம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினத்தன்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மண்வெட்டியுடன் சென்றேன். அங்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கோவிந்தம்மாள் வரப்பில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது எனக்கும், அவருக்கும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் அவதூறாக திட்டினார். இதனால் ஆத்திரமடைந்து மண்வெட்டியால் அவரது தலையில் பலமாக தாக்கினேன். இதில் நிலைகுலைந்த கோவிந்தம்மாள் நெல் வயலில் கீழே சாய்ந்தார். அதனைதொடர்ந்து மண்வெட்டியை வயல் காட்டுப்பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடி விட்டேன். நான் தலைமறைவாக இருந்த நிலையில் என்னை போலீசார் தீவிரமாக தேடுவதை தெரிந்து கொண்டேன். அதனைத் தொடர்ந்து எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன். இவ்வாற அவர் கூறினார். இதையடுத்து மகாலிங்கத்தை கைது செய்த போலீசார் அவர் கொலை செய்ய பயன்படுத்திய மண்வெட்டியையும் கைப்பற்றினர்.

உடலை வாங்க மறுப்பு

இந்நிலையில் கோவிந்தம்மாளின் மகன் கதிரேசன், மகள் அனுராதா மற்றும் உறவினர்கள், கோவிந்தம்மாளின் கொலை சம்பவத்தில் 4 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே சரணடைந்துள்ளார். மற்றவர்களையும் போலீசார் கைது செய்தால் மட்டுமே கோவிந்தம்மாளின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததை தொடர்ந்து கோவிந்தம்மாளின் உடலை பெற்றுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்