< Back
மாநில செய்திகள்
இந்தி ஒழிக அல்ல... தமிழ் வாழவேண்டும் என்றே கூறுகிறேன்:  குட்டி கதை கூறி விளக்கிய கமல்ஹாசன்
மாநில செய்திகள்

இந்தி ஒழிக அல்ல... தமிழ் வாழவேண்டும் என்றே கூறுகிறேன்: குட்டி கதை கூறி விளக்கிய கமல்ஹாசன்

தினத்தந்தி
|
23 Sept 2023 10:59 AM IST

கோவையில் நடந்த கூட்டம் ஒன்றில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தொண்டர்கள் மத்தியில் ஒரு குட்டிக்கதை கூறினார்.

கோவை,

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கூட்டம் ஒன்று நடந்தது. இதில், அதன் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் ஒரு குட்டிக்கதை கூறினார்.

அவர் கூறும்போது, அண்மையில் சீனாவுக்கு சென்றிருந்தபோது, அங்கு டிக்கெட் கவுன்டரில் இருந்த சீன ஊழியரிடம் ஆங்கிலத்தில் பேசியதாக கூறினார். அதற்கு, செல்போனில் வாய்ஸ் மூலம் பேச வைத்த அந்த ஊழியர், சீன மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு, செல்போன் மூலமாகவே ஆங்கிலத்தில் பதிலளித்ததாக தெரிவித்தார்.

அதுபோல், இந்தியாவிலும் நடக்கும் என்ற கமல்ஹாசன், டெல்லியில் இருந்து இந்தியில் கடிதம் போட்டால், ஸ்கேன் செய்யும்போது தமிழில் பதில் வரும் என்றார். இந்தி மொழி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை, தமிழ் வாழவேண்டும் என்றுதான் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்