< Back
மாநில செய்திகள்
நான் தனிநாடு கேட்கவில்லை; இந்த நாடே என்னுடையது: சீமான்
மாநில செய்திகள்

நான் தனிநாடு கேட்கவில்லை; இந்த நாடே என்னுடையது: சீமான்

தினத்தந்தி
|
1 Sept 2024 1:54 PM IST

பாரத நாடு பைந்தமிழர் நாடு; பகைவர் அனைவரும் ஓடு என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

சென்னை,

சென்னையில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

கார் ரேஸ் நடத்தினால் முதலீடு வரும் என்றால் எதற்காக முதலீட்டுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்?. இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் அதிகாரத் திமிரில் கார் ரேஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் தனிநாடு கேட்கவில்லை. இந்த நாடே என்னுடையது தான். தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியென்றால் இந்த நாடே என்னுடையது.

பாசிஸ்ட், பிரிவினைவாதி என்று என்னை பார்த்துக் கூறும்போது பெருமைதான் ஏற்படுகிறது. இந்தியா என் நாடு, பாரத நாடே தமிழர் நாடு என்று இனி வரும் தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும். பாரத நாடு பைந்தமிழர் நாடு. பகைவர் அனைவரும் ஓடு. இந்தியாவை இந்துக்கள் நாடு என்பது சொல்வதை நான் ஏற்கமாட்டேன். இந்த நிலத்தில் தாய்மொழியாக தமிழை கொண்டவர்கள் தான் வாழ்ந்தார்கள்.

இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ். இந்தியாவின் தொன்மத்தை தமிழில் அறியலாம் என்று பிரதமர் மோடி சொல்கிறார்; ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் ஏன் தமிழ் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்