< Back
மாநில செய்திகள்
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கிடைத்த தரச் சான்றிதழ்
மாநில செய்திகள்

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கிடைத்த தரச் சான்றிதழ்

தினத்தந்தி
|
29 Feb 2024 8:23 PM IST

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் உணவை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றும் ரெயில் நிலையங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். மத்திய (சென்ட்ரல்) ரெயில் நிலையத்திற்கு 'Eat Right Station' தரச் சான்றிதழை இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கியுள்ளது. இதுவரை நாட்டில் உள்ள 150 ரெயில் நிலையங்களுக்கு இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்