< Back
மாநில செய்திகள்
கணவர் வெளிநாட்டில் வேலை... மனைவி வேறொருவருடன் உல்லாசம்... அடுத்து நடந்த பரபரப்பு
மாநில செய்திகள்

கணவர் வெளிநாட்டில் வேலை... மனைவி வேறொருவருடன் உல்லாசம்... அடுத்து நடந்த பரபரப்பு

தினத்தந்தி
|
2 July 2024 8:57 AM IST

இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

கோவை,

கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த முகமது பிலால் (27) என்பவர் அறிமுகமானார். இவர் கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட் ஒன்றில் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது பிலால் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி அவருடன் அடிக்கடி பேசி வந்தார். இதனால் வழக்கமான பழக்கம், நாளடைவில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு வந்தது. இந்த சந்தர்ப்பம் எப்போது என காத்திருந்து பயன்படுத்தி தனது வக்கிரபுத்திக்கு வலைவீசி உள்ளார். வஞ்சமில்லாமல் நெஞ்சத்தை பறிகொடுத்த அந்த பெண்ணும் வலையில் வீழ்ந்தார். இதனால் முகமது பிலால் இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

அத்துடன் அவர் நிறுத்தவில்லை. தன்னுடன் தொடர்ந்து உல்லாசமாக இருக்காவிட்டால், கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறிவிடப்போவதாக தொல்லை கொடுத்து, மிரட்டி வந்ததால் இளம்பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. விதிவசத்தால் விழுந்து விட்டோம்...தற்போது விட்டுவிட முடிவு செய்து விட்டோம். அதன் பின்னரும் ஏன் இந்த மிரட்டல் என்று சொல்ல முடியாத வேதனையில் தவித்துள்ளார்.

அவரது போக்குக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, அவர் செல்போனில் பேசும்போது தவிர்த்து விடுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது பிலால் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நபர் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இதனை இளம்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கவலை அவளை, மூழ்கடிக்க தொடங்கியது. இதுதொடர்பாக இளம்பெண் உக்கடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் முகமது பிலால் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்