< Back
மாநில செய்திகள்
கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
21 May 2022 1:38 AM IST

கணவன்-மனைவியை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆலங்குடி,

ஆலங்குடியை சேர்ந்தவர் முருகன் (வயது 36), விவசாயி. இவரது மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஸ்ரீவித்யா தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீவித்யாவின் பெற்றோர் ஆலங்குடியில் உள்ள ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த உறவினரான முருகேசன் (42) என்பவரது வீட்டிற்கு சென்று தங்களது மகளின் நிலை குறித்து பேசியுள்ளனர். அப்போது அங்கு வந்த முருகன் தான் வைத்திருந்த கத்தியால் முருகேசன் மற்றும் அவரது மனைவி கோகிலாவை (38) குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் கணவன்-மனைவியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விவசாயியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்