< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு செய்த கணவன் - மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி
மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த கணவன் - மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி

தினத்தந்தி
|
21 Aug 2023 6:02 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்துவந்த கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே ராயவேலூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல் - அழகுசின்னு தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மதுபோதைக்கு அடிமையான சண்முகவேல், வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி இருவரும் 4 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், சண்முகவேல் மீண்டும் மதுபோதையில் தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த மனைவி அழகுசின்னு, கணவன் மீது மிளகாய்ப்பொடி தூவி, அவரை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார். இதில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அழகுசின்னுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனை மனைவி சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்