< Back
மாநில செய்திகள்
கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
நீலகிரி
மாநில செய்திகள்

கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
7 Oct 2023 4:00 AM IST

குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 52). இவருடைய மனைவி மைமூனா. இதற்கிடையே கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 6.12.2018 அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், மைமூனா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ், சோபாவில் இருந்த மெத்தையை எடுத்து மைமூனாவை தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து மைமூனா கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கூடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய ஜெயராஜூக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சசின்குமார் தீர்ப்பளித்தார். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்