அருப்புக்கோட்டை: ஜீவனாம்சம் கேட்டு மனைவி தொடர்ந்த வழக்கில் கணவருக்கு 18 மாதம் ஜெயில்
|ஜீவனாம்சம் கேட்டு மனைவி தொடர்ந்த வழக்கில் அருப்புக்கோட்டை நீதிமன்றம் கணவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை நல்லூர் காட்டுபாவா தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் பரிதாபாத்தியமா (வயது 37). இவர் தனது கணவர் பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த அபுதாஹீரை (44) விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கு தர வேண்டிய ஜீவனாம்சம் தொகையை பெற்று தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முத்துஇசக்கி அபுதாஹீருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் அளித்துள்ள தீர்ப்பில் கூறியதாவது,
அபுதாஹீர் அவரது மனைவி பரிதாபாத்தியமாவிற்கு மாதம் ரூ. 20 ஆயிரம் பராமரிப்பு செலவிற்கு தரவேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டும், அபுதாஹீர் 54 மாதங்களாக பணம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அபுதாஹீர் 54 மாத வழங்க வேண்டிய ரூ.10 இலட்சத்து 80 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் அல்லது 18 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அபுதாஹீர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.