< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மனைவியின் கடைக்கு வரும் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்த கணவர்..!
|24 Jun 2023 2:36 PM IST
மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் கணவரை போலீசார் கைது செய்தனர்
சென்னை,
சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் திருமணி. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி அதேபகுதியில் டெய்லர் கடை நடத்திவருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார்.இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார்.
இந்த தொல்லையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. சம்பவதன்றும் மனைவியை தாக்கியுள்ளார். இதனை அவரது மூத்தமகன் தடுத்துள்ளார். இதனால் மகனையும் கட்டையால் அடித்துள்ளார்.
இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போலீசார் திருமணியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிண்றனர்.