< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரிவாளால் தலையில் வெட்டிய கணவன்... இரத்த வெள்ளத்தில் அலறி ஓடிய மனைவி - கோவையில் பயங்கரம்
|14 Oct 2023 10:57 PM IST
கோவையில் குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவையில் குடும்ப தகராறு காரணமாக தூய்மை பணியில் இருந்த மாநகராட்சி பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணபதி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவருக்கும், அவரது மனைவி அனிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று காலை அனிதா வழக்கம் போல பணிக்குச் சென்ற நிலையில், சங்கனூர் நாராயணசாமி வீதியில் உள்ள பூங்காவிற்கு சென்ற வடிவேலு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். அலறி ஓடிய அனிதாவை, பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வடிவேலுவை ரத்தினபுரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.