< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு கணவர் தற்கொலை
|31 May 2022 12:07 AM IST
தூக்குப்போட்டு கணவர் தற்கொலை
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அத்திகடையை சேர்ந்தவர் முகமதுநூர்தீன். இவரது மகன் அப்துல் ஜலீல் (வயது 34). இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் கணவருடன், மனைவி பேசாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த அப்துல் ஜலீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முகமது நூர்தீன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.