< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

தினத்தந்தி
|
30 Sept 2022 1:01 AM IST

சேலத்தில் கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதல்

சேலம் கோரிமேடு ஏ.டி.சி.நகர் செல்வபுரத்தை சேர்ந்தவர் தீபன் (வயது 32). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாப்பேட்டையில் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். மதுஅருந்தும் பழக்கம் இருந்த இவர், ஆசிரியர் வேலையை இழந்து கோரிமேட்டில் உள்ள ஒரு மீன்கடையில் வேலை செய்து வந்தார். தீபனின் மனைவி தீபா (28), சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் தீபனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவரது கள்ளக்காதல் விவகாரம் தீபாவுக்கு தெரிய வரவே, அவர் கணவரை கண்டித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தீபனுக்கும், அவருடைய மனைவி தீபாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருவரும் தூங்க சென்றனர். நேற்று காலையில் தீபா எழுந்து பார்த்தபோது கணவரை காணவில்லை. வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரையில் தீபன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கதறி அழுதார்.

தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தீபனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்