< Back
மாநில செய்திகள்
மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன் - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன் - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
7 Jan 2024 11:24 PM IST

போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு,

கோபிசெட்டிபாளையம் அருகே மனைவியை கொலை செய்து விட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அம்மன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர், 2 இடங்களில் பெட்ரோல் பங்க் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி காந்திமதி. மகன் கார்த்திக் அசாம் மாநில விமானப்படை பைலட்டாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் காலையில் உறவினர் ஒருவர் அவர்களது வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். காந்திமதி கத்தியால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஈஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்