< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய கணவன் - மதுரையில் பரபரப்பு
|17 Nov 2022 6:37 PM IST
திருப்பரங்குன்றத்தில் மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஆதி சுகன்யா என்பவருக்கும் அவரது கணவர் கார்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
இந்த நிலையில் அதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணைக்கு பின் மனைவிக்காக ஆஜரான வக்கீல் நீதி மலரை, கார்த்திக் ஆபாசமாக திட்டியதாகவும், தொடர்ந்து அவரை கார்த்திக்கும், அவரது தாயாரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.