ராணிப்பேட்டை
புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவன் கைது
|மேல்விஷாரத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆஜிபேட்டை 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஜபரர் அலி (வயது 25). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அலீமா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது அலீமா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் திருமணமாகி 4 மாதமே ஆனதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் திருமணத்தின்போது 12 பவுன் நகை பெண்வீட்டார் போட்டுள்ளனர். அதை ஜபரர் அலி அடகு வைத்து உள்ளதாக தெரிகிறது. மேலும் வரதட்சணை கேட்டு அலீமாவை துன்புறுத்தியதாக தெரிகிறது
இதனால் கணவன்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அலிமா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜாபர் அலியை நேற்று ஆற்காடு டவுன் போலீசார் கைது செய்தனர்.