< Back
மாநில செய்திகள்
தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

தினத்தந்தி
|
7 July 2022 9:40 PM IST

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

குஜிலியம்பாறை அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் சந்தனத்துரை (வயது 45). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாக்கியலட்சுமி, கடந்த 24-ந்தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவருடைய தாயார் வீரமணி, குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பாக்கியலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக சந்தனத்துரை, அவரது தாயார் கோவிந்தம்மாள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சந்தனத்துரை நேற்று கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்