< Back
மாநில செய்திகள்
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

தினத்தந்தி
|
30 Jun 2022 9:30 PM IST

கொடைக்கானலில், கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மோனிஷா (வயது 23). இவரும், வட்டக்கானலை சேர்ந்த ஆரோக்கியசாம் (25) என்பவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதில், மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த மாதம் 2-ந்தேதி மோனிஷா தனது கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. முருகேசன் விசாரணை நடத்தி வந்தார். மேலும் தனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மோனிஷா இறந்த வழக்கில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 25-ந்தேதி நாயுடுபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தற்கொலைக்கு தூண்டியதாக மோனிஷாவின் காதல் கணவர் ஆரோக்கியசாமை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்