< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை கண்டித்த மனைவியை தாக்கிய கணவர் கைது
|6 Dec 2022 1:37 PM IST
காலையிலேயே குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை கண்டித்த மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திரு.வி.க. நகர் கே.சி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54). இவருடைய மனைவி பூங்கோதை (42). குடிபோதைக்கு அடிமையான சேகர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சேகரிடம், "காலையிலேயே ஏன் இப்படி குடித்து விட்டு வருகிறீர்கள்?" என பூங்கோதை கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், பூங்கோதையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த பூங்கோதை, பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 10 தையல்கள் போடப்பட்டது.
இதுபற்றி பூங்கோதை கொடுத்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.