< Back
மாநில செய்திகள்
மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது

தினத்தந்தி
|
21 April 2023 12:15 AM IST

சுரண்டையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சுரண்டை:

சுரண்டையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

கணவன்-மனைவி தகராறு

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் நவமணி (வயது 54). இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (43).

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி சிவகுருநாதபுரம் பகுதி பாறையடி தெருவில் கடந்த ஒரு மாதமாக தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்ததாக தெரிகிறது.

கழுத்து அறுப்பு

இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் மளிகை பொருட்கள் வாங்க வந்தபோது நவமணிக்கும், ராஜேஸ்வரிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவமணி, ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நவமணியை கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

மேலும் செய்திகள்