நாமக்கல்
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
|மோகனூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்
மோகனூர் அருகே உள்ள அருர் தெற்கு ஆலம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா (22) என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அர்ச்சனா கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி கரூருக்கு வேலை சென்று விட்டு அரூர் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அர்ச்சனாவை வெட்டினார். இதில் காயம் அடைந்த அர்ச்சனாவை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை மூர்த்தி மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.