< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
|21 May 2022 12:34 AM IST
ஓசூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்
ஓசூர் ஆவலப்பள்ளி சாலை பாரதியார் நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனா (23). கணேசிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 18-ந் தேதி ஏற்பட்ட தகராறில் மீனாவை கணேஷ் கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த மீனா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.