< Back
மாநில செய்திகள்
வானகரத்தில் கணவன்-மனைவி தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வானகரத்தில் கணவன்-மனைவி தற்கொலை

தினத்தந்தி
|
17 April 2023 12:41 PM IST

வானகரத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

நேபாளத்தை சேர்ந்தவர்கள்

நேபாள நாட்டை சேர்ந்தவர் பிரேம் தேவ்பா (வயது 22). இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கமலா தேவ்பா (20) என்பவருடன் திருமணம் ஆனது. கடந்த சில வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

பிரேம் தேவ்பா அதே அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும், அவருடைய மனைவி கமலா தேவ்பா வீட்டு வேலையும் செய்து வந்தனர்.

கணவன்-மனைவி தற்கொலை

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கணவன்-மனைவி இருவரும் அவர்களது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது பிரேம் தேவ்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையிலும், கமலா தேவ்பா வாயில் நுரை தள்ளிய நிலையில் தரையிலும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

காரணம் என்ன?

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து முடிவு செய்து மனைவி விஷம் குடித்தும், கணவன் தூக்குப்போட்டும் தற்கொலை செய்தார்களா? அல்லது மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பிரேம் தேவ்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றும் இருவரது பெற்றோரிடமும் ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்