திருவாரூர்
கணவன்-மனைவியை தாக்கி 5 பவுன் சங்கிலி-பணம் பறிப்பு
|கணவன்-மனைவியை தாக்கி 5 பவுன் சங்கிலி-பணம் பறிப்பு
குடவாசல்
குடவாசல் அருகே கணவன்-மனைவியை தாக்கி 5 பவுன் சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கணவன்-மனைவி மீது தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கடலங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வசந்தி. கடந்த 2-ந்தேதி இரவு 8 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கினர். பின்னர் வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து குடவாசல் போலீசில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
கணவன்-மனைவி ஆகியோைர தாக்கி 5 பவுன் சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.