< Back
மாநில செய்திகள்
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதா?
சிவகங்கை
மாநில செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதா?

தினத்தந்தி
|
11 Dec 2022 11:11 PM IST

சிவகங்கை அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதாக கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


சிவகங்கை அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதாக கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

வனப்பகுதி

சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டையை அடுத்து உள்ளது மாடுமறித்தான் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்ற விவசாயியின் ஆட்டுக்குட்டிகள் அருகில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது இந்த ஆடுகளில் ஒன்று தலையை துண்டித்த நிலையில் இறந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் அந்தபகுதிக்கு சென்று பார்த்தபோது விலங்கின் கால் தடங்கள் கிடைத்துள்ளது. இது புலியின் கால் தடமாக இருக்கலாம் என்று அந்த பகுதியினர் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்து விலங்கு நடமாட்டம் இருந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்களில் 10-க் கும் மேற்பட்ட சென்சாருடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி விலங்குகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்