< Back
மாநில செய்திகள்
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

தினத்தந்தி
|
8 Aug 2022 9:52 PM IST

பொன்னேரி அருகே சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.71 லட்சமும், 127 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க கோவில்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாபுரி கிராமத்தில் வரலாற்று புகழ்மிக்க பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த கோவிலில் தொடர்ந்து 4 செவ்வாய்க்கிழமைகளில் வருகை தந்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனை தொடர்ந்து அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் நிறைவேறியதும் பணம், தங்கம், வெள்ளிப் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

உண்டியல் காணிக்கை

இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி அன்று இந்த கோவிலில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு, கோவிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் சித்ராதேவி தலைமையில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை தொடங்கினர். இதில் 71 லட்சத்து 32 ஆயிரத்து 801 ரூபாய் பணமும், 127 கிராம் தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்