< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக்கழிவு - கைதானவர் போலீசாரிடம் வாக்குமூலம்
|6 Sept 2024 2:56 AM IST
தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக்கழிவு பூசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கடந்த 2-ந்தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக்கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், எருமபட்டியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் முன்விரோதம் இருந்ததால், சத்துணவு மைய கதவில் மனித கழிவை பூசியதாக போலீசாரிடம் துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.