< Back
மாநில செய்திகள்
கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு

தினத்தந்தி
|
26 May 2022 12:33 AM IST

கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே கீழகாஞ்சிரங்குளம் கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்பு கூடை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை செய்தனர். அப்போது அந்த இடத்தில் கிடைத்த கைலி மற்றும் சட்டையை வைத்து விசாரணை செய்ததில் முதுகுளத்தூர் அருகே உள்ள மொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வீரன்(வயது 72) என்பவருடையது என தெரியவந்தது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இதுகுறித்து வீரணன் மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வந்தனர். வீரனின் கைலி, சட்டை கண்மாய் பகுதியில் எலும்பு கூடு அருகே கிடந்ததால் இறந்தது அவராக இருக்கலாம் என்ற கோணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்