< Back
மாநில செய்திகள்
கோயம்பள்ளி கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
கரூர்
மாநில செய்திகள்

கோயம்பள்ளி கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:14 AM IST

கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கோயம்பள்ளி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பில் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, கோயம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்