< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் வட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
|12 May 2023 2:17 PM IST
காஞ்சீபுரம் வட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 186 பயனாளிகளுக்கு ரூ.304.57 (ரூ.3 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.