காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்
|காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கோட்டூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
முகாமில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.
மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதை யொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை வருவாய் ஆர்.டி.ஓ. முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. அதனை முறையாக பரிசீலித்து, பெறப்பட்ட மனுக்களில் 245 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 47 லட்சத்து 1,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், காஞ்சீபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.