< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
வளர்புரத்தில் மனுநீதி நாள் முகாம்
|9 Oct 2023 11:39 PM IST
வளர்புரத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் தலைமையில் நாளை நடக்கிறது.
அரக்கோணம் தாலுகா வடக்கு உள்வட்டம் மற்றும் பாராஞ்சி உள்வட்டம் கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்புரம் கிராமத்தில் திருநாகேஸ்வரர் சுவாமி கோவில் வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.