< Back
மாநில செய்திகள்
மனுநீதி நாள் முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

மனுநீதி நாள் முகாம்

தினத்தந்தி
|
29 Dec 2022 12:15 AM IST

ஆலங்குளம் அருகே மனுநீதி நாள் முகாம் நடந்தது.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கலெக்டர் ஆகாஷ், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் தெரிவித்தார். இம்முகாமில் இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்பட ரூ.87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும் போது, தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியக்கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தொழில் முனைவோர் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகளை பெற்று பயனடையலாம். மேலும், நமது மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 பள்ளிகளை தேர்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

முகாமில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன், கடங்கனேரி ஊராட்சி மன்றத்தலைவர் அமுதா தேன்ராஜ், தெற்கு காவலாகுறிச்சி பஞ்சாயத்து தலைவி மாலதி சுரேஷ், பஞ்சாயத்து துணை தலைவர் செல்வராஜ், தனித்துணை கலெக்டர் ஷீலா, ஆலங்குளம் தாசில்தார் இரவீந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்