நீலகிரி
மனுநீதி நாள் முகாம்
|கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 40 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஒன்றியக்குழு தலைவர் ராம்குமார், குஞ்சப்பனை ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் தாசில்தார் காயத்ரி, சமூக நல தாசில்தார் மகேஸ்வரி உள்பட கோழிக்கரை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார துறை உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.