< Back
மாநில செய்திகள்
மனுநீதி நாள் முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

மனுநீதி நாள் முகாம்

தினத்தந்தி
|
28 July 2022 7:22 PM IST

சிவகிரி அருகே மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது

சிவகிரி:

சிவகிரி அருகே கூடலூர் பிர்க்காவை சேர்ந்த துரைச்சாமியாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்.எல.்ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார் வரவேற்று பேசினார்.

கடந்த மாதம் 26-ந்தேதி துரைச்சாமியாபுரத்தில் வைத்து முன்னோடி மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அவற்றில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய 58 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில் 42 பேருக்கு நலத்திடட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிவகிரி மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், துரைச்சாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா வேல்முருகன், பஞ்சாயத்து எழுத்தர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்