< Back
மாநில செய்திகள்
மனுநீதி நாள் முகாம்
கரூர்
மாநில செய்திகள்

மனுநீதி நாள் முகாம்

தினத்தந்தி
|
28 Aug 2023 11:41 PM IST

மனுநீதி நாள் முகாம் நாளை நடைபெறுகிறது.

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் தெற்கு கிராமத்தில் நாளை (புதன்கிழமை) மதியம் 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.

மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பில் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்