< Back
மாநில செய்திகள்
மனித சங்கிலி போராட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மனித சங்கிலி போராட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2023 11:45 PM IST

பெரம்பலூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊராளி கவுண்டர் இளைஞர் பேரவை சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். டி.என்.டி. என்ற ஒற்றை சாதி சான்றிதழ் மத்திய-மாநில அரசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு உத்தரவுப்படி டி.என்.டி. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராளி கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

மேலும் செய்திகள்