< Back
மாநில செய்திகள்
கோவையில் மனித சங்கிலி போராட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கோவையில் மனித சங்கிலி போராட்டம்

தினத்தந்தி
|
21 Oct 2023 1:45 AM IST

கோவையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவளித்த மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. குனியமுத்தூர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு பகுதி செயலாளர் சதாம் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் எம்.எச்.ஜாபர் அலி, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பி.எம்.ஏ.பைசல், மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் சுலைமான், மாவட்ட துணை செயலாளர்கள் ஹனிபா, ஜாபர் சாதிக், அன்வர் மற்றும் பலர் கைகளை கோர்த்தபடி கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்