< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
|15 July 2023 12:30 AM IST
பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் பேரிடர் சமயத்தில் செயல்படுவது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விழிப்புணர் பயிற்சி முகாமை நடத்தினர். ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். முகாமில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து இயற்கை பேரிடர், விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். முகாமில் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.