< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு விடைத்தாள்கள் தேர்வுக்கேற்றபடி எவ்வாறு வழங்குவது? - தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விடைத்தாள்கள் தேர்வுக்கேற்றபடி எவ்வாறு வழங்குவது? - தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை

தினத்தந்தி
|
19 Feb 2023 7:10 PM IST

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கி நடைபெற இருக்கிறது.

சென்னை,

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கான விடைத்தாள்கள், முகப்புத்தாள்கள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? என்பதற்கான விளக்கத்தை தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை வழங்கி இருக்கிறது.

அந்த வகையில், விடைத்தாள்கள், முகப்புத் தாள்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி, நாளை (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை அதனை தைக்கும் பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எந்தெந்த தேர்வுகளுக்கு எவ்வளவு பக்கங்களில் விடைத்தாள்கள் இருக்க வேண்டும்? உலக வரைபடம் இணைத்து கொடுக்கப்பட வேண்டிய தேர்வுகள் எவை? கூடுதல் விடைத்தாள்கள் எவ்வளவு வழங்கவேண்டும்? வரைக்கட்ட தாளுடன், விடைத்தாள்கள் வைக்கப்பட வேண்டிய தேர்வுகள் எவை? என்பது போன்ற விவரங்களையும் அரசு தேர்வுத் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரையாக வழங்கி இருக்கிறது.

மேலும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக தேவையான கூடுதல் விடைத்தாள்கள் கையிருப்பில் உள்ளதா? என்பதையும் உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்