< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி கோவில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
|29 Aug 2023 6:21 PM IST
பழனி கோவில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி என்றும் கோவில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடையை அமல்படுத்தாதது ஏன் என்றும் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இதனைத்தொடர்ந்து புகைப்படம் எடுக்க செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் என்றும், பழனி கோவிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது என செப்டம்பர் 1-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவில் கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்த அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.