< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை...? வெளியான அறிவிப்பு
|17 Dec 2022 11:32 AM IST
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் ழுழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 24-ம் தேதியில் இருந்து ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை அளித்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.