< Back
மாநில செய்திகள்
பொறியியல் சிறப்பு கலந்தாய்வு எவ்வாறு நடக்கும்? - வெளியான புதிய தகவல்
மாநில செய்திகள்

பொறியியல் சிறப்பு கலந்தாய்வு எவ்வாறு நடக்கும்? - வெளியான புதிய தகவல்

தினத்தந்தி
|
18 Aug 2022 9:47 AM IST

பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, கடந்த இரு தினங்களுக்கு முன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அதன்படி வரும் 20ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, வரும் 25ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளியில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவித்துள்ளார்.

சிறப்பு பிரிவு மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கோ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கோ நேரில் வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்