< Back
மாநில செய்திகள்
கொலை நடந்தது எப்படி?
மாநில செய்திகள்

கொலை நடந்தது எப்படி? ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கூறிய அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
7 July 2024 2:51 PM IST

ஆம்ஸ்ட்ராங்கிற்கு உணவு டெலிவரி வந்துள்ளதாக கூறி சிலர் வந்து கொலை செய்ததாக வீரமணி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் எப்படி வந்தனர்? என்ன நடந்தது? என்று அவரது அண்ணன் வீரமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் அருகில் இருந்த பாலாஜி என்பவரிடம் உணவு டெலிவரி வந்துள்ளதாக அந்த கும்பல் பேசியுள்ளது. என்ன ஆர்டர் என்று வந்தவர்களிடம் பேசியபோது பாலாஜியை அருகில் இருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றபோது அந்த கும்பல் என்னையும் வெட்டியது. முதுகிலும், தலையிலும் வெட்டுக்காயத்துடனேயே ஆம்ஸ்ட்ராங்கை சென்று பார்த்தேன். நான் பார்த்தபோது ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சற்று நேரத்திலேயே மயக்கமடைந்தார்.என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் செய்திகள்