திருச்சி
காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 குழந்தைகள் இறந்தது எப்படி?
|காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 குழந்தைகள் இறந்தது எப்படி? என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாம்பழச்சாலை பகுதியில் சாக்சீடு புனித மார்டின் சிறப்பு தத்து வள மையம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்ட 9 பச்சிளம் குழந்தைகள் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தன. அதில் 2 குழந்தைகள் நேற்று முன்தினம் ஒரே நாளில் மரணம் அடைந்தன. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 மாத பெண் குழந்தை கடுமையான மூச்சுக்குழாய் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 நாட்களான பெண் குழந்தை மரபணு சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது. இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி 12-ந்தேதி (நேற்று முன்தினம்) இறந்தன. மேலும் மற்ற குழந்தைகளை பராமரிக்க தத்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, கூடுதலாக ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர் தினமும் குழந்தைகளை நேரில் சென்று கண்காணித்து வருகிறார் என்று கூறப்பட்டு இருந்தது.